நுவரெலியாவில் கடும் பனி-பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்

நுவரெலியாவில் நேற்று ( 6 ) ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பனி பொழிவுகள் அதிகமாக காணப்பட்டது.  இந்த பனி பொழிவுகள் அதிகரிக்கப்பட்டதால் புற்தரைகளும் தேயிலை செடிகளும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி செடிகளும் அதிகளவில் கருகி பாதிப்பு அடைந்தன.
அதே வேளை கடும் பனி பொழிவினால் கடும் குளிரும் நிலவியது.
விடியற்காலை குளிர் அதிகமாக காணப்பட்டதால் தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களது கடமைகளுக்கு செல்வதற்கும் சிரமம்பட்டதையும் காணமுடிந்தது. நுவரெலியாவில் கடந்த டிசெம்பர் மாதம் முதல் இரவில் குளிராவும் பகலில் வெப்பம் அதிகமாகன காலநிலை
நிலவுகின்றது. அதேவேளை நுவரெலியாவில் தற்பொழுது வரட்சியான காலநிலை நிலவுவதால் வன பிரதேசங்களில் தீ வைப்பு சம்பவங்களும் இடம் பெருகின்றன.

Related Articles

Latest Articles