இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலப்பகுதி முதல் இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனாவால் 480 பேர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து பிரதேசங்களை கொண்ட 13 சுகாதார பிரிவுகளை அடங்கிய பகுதிகளிலேயே மேற்படி மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி நுவரெலியா பிரதேசத்தில் 148 பேரும், அம்பகமுவ பிரதேசத்தில் 140 பேரும், வலப்பனை பிரதேசத்தில் 76 பேரும், கொத்மலை பிரதேசத்தில் 71 பேரும் மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தற்போது தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறைவடைந்துவருவதை காணமுடிகின்றது. நேற்று குறித்த மாவட்டத்தில் 11 தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரணம் எதுவும் பதிவாகவில்லை.