நுவரெலியா, உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நுவரெலியா ருவான்எலிய பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் வீதியில் விழுந்து கிடந்தபோது , பின்னால் வந்த மாநகரசபைக்கு சொந்தமான பவுசர் ஒன்று அவர் மீது ஏறியதாலேயே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
