நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் இன்று (24.11.2020) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு கண்டியை சேரந்த ஒருவர் வருகை தந்து அங்கிருந்து மதுபானம் அருந்தி சென்றுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த மதுபான விற்பனை நிலையம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மதுபான விற்பனை நிலையம் நுவரெலியா நகரில் பிரதான வீதியில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
நகரில் இயங்குகின்ற அனைத்து விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.ஏற்கனவே குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒரு சில விற்பனை நிலையங்களில் தகவல்கள் பேனப்படுவதில்லை என அறிய முடிகின்றது.
தகவல்களை முறையாக பேனாத வியாபார நிலையங்கள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.மேலும் சுற்றுலா விடுதிகளுக்கு அவதானம் நிறைந்த பகுதிகளில் இருந்து வருகை தருகின்றவர்களை எந்த காரணம் கொணடும் அவர்களுக்கு தங்க வைக்க இடம் கொடுக்க வேண்டாம் எனவும் சுகாதார பிரிவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இது தொடர்பாக சுற்றுலா விடுதி முகாமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்
எங்களிடம் வருகின்ற வாடிக்கையாளர்களின் தேசிய அடையாள அட்டையை கருத்தில் கொண்டே அவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அவதானம் நிறைந்த அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருகை தருகின்றார்களா? என்பதை அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது அவதானம் நிறைந்த பகுதிகளில் இருந்து வருகை தந்தாலும் அநேகமானவர்களுடைய தேசிய அடையாள அட்டையில் இருப்பது வேறு பகுதிகளில் இருக்கின்ற விலாசமாகும்.
ஊதாரணமாக நுவரெலியா சேர்ந்த ஒருவர் கொழும்பில் சென்று வேலை செய்கின்ற பொழுது அவருடைய தேசிய அடையாள அட்டையில் நுவரெலியா விலாசமே இருக்கும் எனவே அவருக்கு தங்குமிட வசதிகளையோ அல்லது வேறு தேவைகளையோ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்.
எனவே இது ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கின்றது எங்களுக்கு எங்களுடைய வியாபாரத்தை முன்னெடுத்து செல்வதற்கு.இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தொடர்பாக சுகாதார பிரிவினரே எங்களுக்கு உரிய அறிவித்தலை வழங்க வேண்டும்.எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியாவை பொறுத்த அளவில் சுகாதார துறை முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்த நிலையிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் தொழிலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கான நிவாரணமும் வழங்கப்படுவதில்லை.இவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கின்றது.இவர்;கள் தொடர்பாக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
