நுவரெலியாவில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவும், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்ஜஸ்றி கிராம சேவகர் பிரிவுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடைமுறை தொடரும்.

Related Articles

Latest Articles