நாடளாவிய ரீதியில் இன்று (6) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியாவிலும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.



ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மஹித்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலககுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து வர்த்ததக நிலையங்களும் திறந்த பொருளாதார மத்திய நிலைய வர்த்தக நிலையங்களும் இன்று முழுநேரமும் மூடி ஆதரவு தெரிவித்ததோடு வர்த்தகர்களும் வர்த்தக நிலைய ஊழியர்களும் இந்த ஹர்த்தாலில் கலந்துக்கொண்டனர்.
நுவரெலியாவிலுள்ள அனைத்து அசாங்க தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன தனியார் போக்குவரத்து பஸ் சேவை நடைபெறவில்லை. இன்று காலை இலங்கை போக்குவரத்து பஸ் சேவை ஈடுபட்டிருந்த போதிலும் காலை 10 மணிக்கு மேல் அந்த பஸ் சேவை நடைபெறவில்லை. நுவரெலியா நகரில் நடைபெற்ற ஹர்தாலில் வர்த்தகர்ள், அதிபர் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர் யுவதிகள்,அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்து ,கிறிஸ்துவம் பௌத்த மதகுருமார்கள் என பல தரப்பினர் கலந்துக்கொண்டனர்.
நுவரெலியா மத்திய சந்தைக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கோத்தா கோ ஹோம்கமவிற்கு அருகில் ஆரம்பமான ஹர்த்தால் ஊர்வலம் எலிசபெத் வீதி ,லோசன் வீதி,கண்டி வீதி, சந்தனலால் கருணாரட்ன வீதி, பழையகடை வீதீ, மீண்டும் கண்டி வீதி, புதியகடைவீதி வழியாக நுவரெலியா பிரதான தாபாலகத்திற்கு அருகில் ஊர்வலம் சென்று ஹார்த்தால் கூட்டம் நடைபெற்றது.
