நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் தெரிவு செய்யப்பட்ட 35 ஆலயங்களின் புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கு 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.கா நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நிதி ஒதுக்கீட்டில் ,அமைச்சர் நாமல் ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய ஆலயங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்து ஆலயங்களை புனரமைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் வேண்டுகோளில் அமைய இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்கு தலா 38 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் ரமேஷ் தெரிவித்தார்.
நுவரெலியா,கொத்மலை, அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்கு குறித்த நிதி ஒதுக்கீட்டு காசோலைகள் அனுப்பி வைக்கப்படுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்