‘நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்பாடு’ – ஜீவன் தலைமையில் பேச்சு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் திசேர ஜெயசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும், இளைஞர்களை விளையாட்டு துறையில் ஈடுபடுத்தி அவர்களை தேசிய மட்டத்தில் ஒன்றிணைப்பதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ,தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் கனேஷன் ஈஸ்வரன் உட்பட மேலும் சில அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles