போஷணை மட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட போதும் நுரெலியா மாவட்டத்தில் நிறை குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்தைாக சிறுவர்வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக சிறுவர் நோய் விஷேட வைத்தியர் ஹேசான் ஜயவீர தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்தார். ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது-
மாவட்டத்திற்கு மாவட்டம் குறை போஷாக்கு தொடர்பான தரவுகள் மாறுபட்டுள்ளன.இருந்த போதும் பொதுவாக எல்லா மாவட்டங்களிலும் மந்த போஷணை அதிகரித்தே காணப்படுகிறது.
சிறுவர் வைத்திய நிபுணர் என்ற அடிப்டையில் எமது சங்கம் மேற்கொண்ட ஆய்வுகளில், 5 வயதிலும் குறைவான சிறுவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் குறை வருமானம் கொண்ட குடும்பங்களைச்சேர்ந்த சிறுவர்களும் , கூலித் தொழில் செய்யும் குடும்பங்களின் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
காரணம் தேவையானவற்றை தேவையான அளவில் பெற்றோர்களால் கொள்வனவு செய்ய முடிவதில்லை. எனவே இவ்வாறான குடும்பங்கள் உணவு வகைகளை குறைத்தும் உணவின் அளவைக் குறைத்தும் பயன்படுத்துகின்றன.
அதாவது இக்குடும்பங்களின் கொள்வனவு சக்தி குறைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் குறைவான நிறைகொண்ட சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக எடுக்கப்பட்ட தரவுகளின் படி நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 600 சிறுவர்கள் மந்த போஷணையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










