நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு, கற்கள் புரள்வு, வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் மலையகத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், நீரேந்தும் பகுதிகளிலும் அதிகளவில் மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.










