பலாங்கொடை, உடகந்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் , உடனடியாக பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார்.
இதனையடுத்து, பிரதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் துரிதப்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.










