மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று முற்பகல் 10:30 மணியளவில் 3 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாக லக்சபான நீர்மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.
நீர்த்தேக்கத்தில் மேலும் நீரைக் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வான் கதவுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, கேளனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர்
