நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த சந்திரசிரி இன்று சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பிரியந்த சில்வா, 11 மாத காலம் சேவையாற்றி பின்பு பொலிஸ் தலைமை காரியாலயத்திற்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பிரியந்த சந்திரசிரி நியமிக்கப்பட்டு இன்று அவர் கடமையேற்றார்.
இவர் கடந்த ஒரு வருட காலமாக பொலிஸ் தலைமையகத்தில் சேவையாற்றியுள்ளார். அத்துடன், முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி மற்றும் காலி ஆகிய பகுதிகளிலும பிரதி பொலிஸ் மா அதிபராக சேவையாற்றியுள்ளார்.
இன்றைய கடமையேற்பு நிகழ்வில் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார, ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்குப் பொறுப்பான உதவிக் காவல் இயக்குநர்கள், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் தலைமைக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வ. கார்த்திக்
