‘நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு’

நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்துக்கொள்ள முடியாமல் மரக்கறி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு வியாபாரி நாள் ஒற்றுக்கு 3000 கிலோ முதல் 5000 கிலோ மரக்கறி மற்றும் உருளைக் கிழங்கு விற்பனை செய்துவந்தனர். எனினும் இன்று 200 கிலோ மரக்கறிகளை கூட விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

டீசல் தட்டுபாட்டால் வெளிமாவட்டத்திலுள்ள வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் மரக்கறி விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளும் உற்பத்தி செய்யும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர். அத்தோடு மரக்கறி தோட்டங்களிலும் வியாபாரிகளிடம் தொழில்புரியும் தொழிலாளர்களும் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இது இவ்வாறிருக்க தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிப்பொருள் தட்டுபாடு மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்களும் மரக்கறி வியாபாரிகளும் 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் இரசாயன உரம், கிருமிநாசினி இறக்குமதி தடை செய்யப்பட்டதால் மரக்கறி உற்பத்தியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்களும் மரக்கறி வர்த்தகர்ளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் உணவங்களிலும் சுற்றுலா விடுதிகளிலும் உணவு மற்றும் தேனீர் வழங்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் சந்தைக்கு காய்கறிகளை கொள்வனவு செய்வதற்கு ஹோட்டல்காரர்கள் வருவதில்லை.மரக்கறி உற்பத்தி செலவு தற்பொழுது அதிகரித்துள்ளது .அதற்கேற்ப மரக்கறியை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் நஷ்மடைகின்றனர். தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்.

Related Articles

Latest Articles