நுவரெலியா மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு மரக்கறி வகைகளை கொண்டு செல்வதற்கு, இன்று முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்ட விவசாயிகள், தமது விளைச்சல்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லமுடியாமல் உள்ளனர்.
இந்நிலையிலேயே நுவரெயாவிலிருந்து கொழும்புக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு இராணுவத்தினூடாக எரிபொருளை வழங்கும் புதிய நடவடிக்கை இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான மக்கள், மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த அத்தியாவசிய தேவைக்காக ஒரு வாரத்திற்கு மாத்திரம் எரிபொருள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










