நு/ நாவலர் ஆரம்பக் கல்லூரியில் 9 மாணவர்கள் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தி!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் ஒன்றின் பாடசாலையான நாவலர் ஆரம்பக் கல்லூரியின் ஒன்பது மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இவர்களில் கே.டிப்திஷா (170 புள்ளிகள்),எல். நிசேல்யில் சுவேதா (158 புள்ளிகள்), பி.தக்ஷாயினி (155 புள்ளிகள்). எஸ். தனுஷன் (152 புள்ளிகள் ),எம்.வாசினி (151 புள்ளிகள்), கே.பிரணிதா (150 புள்ளிகள்), ஜெனிபர் (147 புள்ளிகள்) என்.யதுமிஷான் (146 புள்ளிகள் ) பி . கிருஷ்ணாதரன் (145 புள்ளிகள்) பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான எம்.பிரசாந்த் மற்றும் எஸ். சிவகுமார் ஆகியோருக்கும் பாடசாலையில் கடமையாற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் க.சதாசிவம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles