முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் கொண்டு செல்வதாகக் கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் நேற்றுக் கைது செய்யப்பட்டனர் என வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இப்படி மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர் எனவும், பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளைப் பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் சென்றனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு லொறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலா னவை கருவுற்ற பசுக்கள் என்றும், சில மாடுகள் நோய் வாய்ப்பட்ட விலங்குகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மாடு கடத்தலில் இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார். வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி தனபால, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் சந்தேக நபர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத் தப்படவுள்ளனர்.
வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலை மைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே.அழகியவண்ண, சப் இன்ஸ்பெக்டர் ஜீவண்ண, பொலிஸ் சார்ஜன்ட் (61518) ரன்வல, பொலிஸ் கான்ஸ்டபிள் (78448) வீரசேன, பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி (18129) திஸாநாயக்க ஆகியோர் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










