நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – சுகாதாரப் பிரிவு

நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதவிர, மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சந்தேகித்தாலோ அல்லது தொற்று உறுதியானாலோ பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு மாணவர் ஒருவர் அல்லது சேவையாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான தனி இடம் ஒன்று பாடசாலைகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளின் நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் குறித்துக் கண்காணிப்பது அத்தியாவசியமாகும்.

மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதியானால் உடனடியாக பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அறிவிக்க வேண்டும்.

அத்துடன், அந்தப் பகுதிக்குப் பொறுப்பான சுகாதார தரப்பினருக்கு அறியப்படுத்துமாறும் குறித்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles