நோர்வூட்டில் குளவிக்கொட்டு – 11 தொழிலாளர்கள் பாதிப்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலவத்தை தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில்,  மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோர்வூட், தண்டுகல தோட்டத்தில் நேற்று மாலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவேளையிலேயே 11 தொழிலாளர்கள் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் 6 பேர் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் 5 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles