நோர்வூட் – பொகவந்தலாவை பிரதான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

நோர்வூட் -பொகவந்தலாவை வரையிலான பிரதான வீதி நீண்டகாலமாக  புனரமைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர்,  ரவி குழந்தைவேல் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 22ஆம்  திகதி   நுவரெலியாவுக்கு விஜயம் ஒன்றை  மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய,  நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை வரையிலான14 கிலோமீற்றர் துாரத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிப்பேன் என்றார்.

குறித்த வீதி ஊடாக வைத்தியசாலைகளுக்கு அவசர நோயாளர்களைக் கொண்டு செல்லும் போது, இடை நடுவில் நோயாளர்கள்  சிலர்  உயிரிழந்த சம்பவங்களும் அண்மைக் காலங்களில் பதிவாகியுள்ளன.

அத்துடன், இந்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள்  அடிக்கடி பழுதடைவதனால் வாகன சாரதிகளும் பெரிதும் ​அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

எனவே, இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, இந்த விடயம் தொடர்பில்,  ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை  அனுப்பி வைத்துள்ளதாக நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்  .

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles