ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கிண்ணம் 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
இதன்படி இலங்கை, இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லேகலயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியை சந்திக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 51 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 40-ல் இலங்கையும், 9-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.










