பசறையில் ஆட்டோ விபத்து – தாயும், குழந்தையும் காயம்!

பசறை, மடுகஸ்தலாவ வீதியில் பயணித்த ஆட்டோவொன்று நேற்று மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பசறை , மடுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய தாயும் அவரது 6 மாத குழந்தையும் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான ஆட்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 6மாத குழந்தை பயணித்துள்ளதுடன், மழை காரணமாக மடுகஸ்தலாவ பகுதியில் வீதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மடுல்சிம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles