பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெமேரியா பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த 40 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 60 லீற்றர் டீசலும் மீட்கப்பட்டுள்ளது.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சட்ட நடவடிக்கைக்காக, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ராமு தனராஜா
