பதுளையில் கார் விபத்து: மூவர் படுகாயம்!

பதுளை, பசறை பிரதான வீதியில் 4ம் கட்டை பகுதியில் இன்று காலை காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கார் பதுளையில் இருந்து புத்தளை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் பதுளை பசறை வீதியில் 4ம் கட்டை பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை அயலவர்கள் உடனடியாக மீட்டு பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles