பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற பாடசாலை மாணவியொருவர் மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பெல்காத்தனையில் இருந்து பசறை நகர் பக்கமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, பசறை ச.தொ.ச ற்கு முன்பாக இருந்த பாதசாரிகள் கடவையில் கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 12 வயதுடைய பாடசாலை மாணவியும் 25 வயதுடைய பெல்காத்தனை பகுதியை சேர்ந்த உந்துருளியை செலுத்திய நபரும் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (11) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பாடசாலை மாணவி பசறை வைத்தியசாலையில் வாட்டு இலக்கம் 5 லும் உந்தருளியின் சாரதி வாட்டு இலக்கம் 2 லும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










