பசறையில் மரத்தில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி!

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்காபத்தன, பாலாகொல்ல – கோணகல பகுதியில் நபரொருவர், மரத்தில் இருந்து கீழே தவிறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பலாக்காய் பறிப்பதற்காக செண்பக மரம் ஒன்றில் ஏறி – பலா மரத்திற்கு மாறுகையிலேயே தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 44 வயதுடைய ஹல்காபத்தன பாலாகொல்ல கோணகல பகுதியைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles