பசறை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென குறித்த வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்ததாகவும் பசறை பொலிஸார் பொதுமக்கள் பசறை பிரதேச சபை தீ அணைப்பு பிரிவு ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் குறித்த வர்த்தக நிலையத்தில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமடைந்துள்ளதாகவும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
ராமு தனராஜா










