பசறை நகரில் மீண்டும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

 

பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுமக்களும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மழைக்காலம் நிலவி வரும் நிலையில், பசறை நகரின் பிரதான வீதிகள் மற்றும் மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் கட்டாக்காலி நாய்கள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன.

இதனால், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாய்கள் திடீரென வீதியின் குறுக்கே ஓடுவதும், வாகனங்களைத் துரத்துவதும் விபத்துகள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளன.

குறிப்பாக, மழையுடன் கூடிய காலநிலையில் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், நாய்கள் திடீரென குறுக்கிடும்போது வாகனங்களைக் கட்டுப்படுத்துவதில் சாரதிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை, பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, பசறை நகரில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles