பதுளை பசறை பிரதான வீதியில் 11 ம் கட்டை (கிரிமண்டல) பகுதியில் பசறையிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் குடை சாய்ந்ததில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-ராமு தனராஜா-










