பசறையில் விபத்துக்குள்ளான பஸ்சின் சாரதி, (இன்று) 12-04-2021ல் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதிபதி சமிந்த கருணாதாச அச்சாரதியை எதிர்வரும் 21ந் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 20ந் திகதி பசறை 13ம் மைல் கல்லருகே இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இவ் விபத்தில் விபத்துக்குள்ளான பஸ்சின் சாரதியும் காயமுற்ற நிலையில், பாதுகாப்புன், விளக்கமறியலில் வைக்கப்பட்டதினால் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துக்குள்ளான பஸ்சின் எதிர்த்திசையில் வந்த லொரிச் சாரதியை நீதிபதி சரீரப் பிணைகளில் விடுவித்திருந்தார்.
பசறை நீதிவான் நீதிமன்றத்தில் 12-04-2021ல் விபத்துக்குள்ளான பஸ் சாரதியை ஆஜர்படுத்திய போதே, நீதிபதி அவரை எதிர்வரும் 21ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
எம். செல்வராஜா, பதுளை
