ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு சிலர் பணயக் கைதியாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர் என்று நாடாமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தேசிய பட்டியல் சர்ச்சை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘சிலிண்டர் அணிக்கு கிடைக்கப்பெறும் தேசிய பட்டியலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. நான்கு கட்சிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளன.
அந்த அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கப்பெறாததால், புதிய ஜனநாயக முன்னணி எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. ஐதேகவில் உள்ள 99 சதவீதமானோர் இதை விரும்புகின்றனர். ஒரு சிலர் மட்டும் எதிர்க்கின்றனர். நான் திருட்டு தனமாக நாடாளுமன்றம் செல்லவில்லை.” -என்றார்.
