பண்டாரவளை, ஹெலமுதுன கிராமத்தில் வீடொன்றில் எரிவாயு அடுப்பொன்று திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
இச்சம்பவம், 11-01-2022ல் அதிகாலை சமையல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, இடம்பெற்றுள்ளது.
அவ்வேளையில் சமையலறையில் எவரும் இல்லாதலால், எவருக்கும் எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை. எனினும், சமையலறையில் ஏனைய பொருட்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
எரிவாயு வெடிச் சத்தம் கேட்டப் பிறகு தான், வீட்டார் சமையலறையில் நுழைந்தனர். சுவாலை விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர்.
எம். செல்வராஜா, பதுளை










