பண்டாரளை கல்வி வலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 589 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இவர்களின் 23 மாணவர்கள் 190 மற்றும் அதற்கு மேற்பட்டபுள்ளிகளைப் பெற்றுமுன்னிலையில் இருக்கின்றனர் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம். ஆரியதாச தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றுக்கள் குறித்து ,பண்டாரவளை கல்விவலயப் பணிப்பாளரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்துஅவர் கருத்துத் தெரிவிக்கையில், “தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேற்றுக்கள் திருப்தியைத் தருகின்றன. இம்முறைநகர்ப் பாடசாலைகளைவிட கிராமியப் பகுதிகள்,தோட்டப்புறப் பகுதிகள் ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்தபெறுபேற்றுக்களைப் பெற்றுள்ளனர்.
எமது கல்விவலயத்தில் இப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3225 மாணவர்கள் தோற்றியருந்தனர். இவர்களில் 2991 பேர்,வெட்டுப்புள்ளிக்குமேல் செல்லாவிட்டாலும் வெட்டுப்புள்ளியைஅண்மித்தவகையில் பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்”என்று கூறினார்.










