பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர் தர பரீட்சைப் பெறுபேற்றுக்களின் அடிப்படையில் 59 மாணவ, மாணவிகள் சித்தி பெற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் பத்தொன்பது பேரும், உயிரியல் பிரிவில் ஒன்பது பேரும், பௌதீகவியல் பிரிவில் பதின்நான்கு பேரும், கலைப்பிரிவில் பதினேழு பேருமாக ஐம்பத்தொன்பது பேர் சித்தி பெற்றுள்னர்.
வர்த்தகப் பிரிவில் ஆர்.தனுஸ்ரீஜன் 3 ‘ஏ’, எம்.ரஜினித்தா 3 ‘ஏ’, ஏ.நிருபன் 2 ‘ஏ’ – 1 ‘பி’, எம்.அனுசிகா 2 ‘ஏ’ – 1 ‘சி’, பி.சதீப்குமார் 1 ‘ஏ’ – 2 ‘பி’, எம்.ரொபின்சன் 1 ‘ஏ’ – 1 ‘பி’ – 1 ‘சி’
கலைப்பிரிவில் பிரிவில் சி.கௌசல்யா 3 ‘ஏ’, ஏ.சதீஸ் மேனன் 2 ‘ஏ’ – 1 ‘பி’, எம்.கவிதா 2 ‘ஏ’ – 1 ‘பி’, பி.அப்சிபா 2 ‘ஏ’ – 1 ‘பி’, வை.அபிலாஷினி 1 ‘ஏ’ – 2 ‘பி’ என்ற வகையில் முதன்மை நிலையில் சித்தி பெற்றுள்ளார்.
ஏனைய 48 மாணவ, மாணவிகளும் ‘பி’ மற்றும் ‘சி’தரங்களில் சித்திப்பெற்று, கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் சித்தி பெற்ற மாணவர்களையும் ஆசிரிய,ஆசிரியர்களையும் வழிநடத்திய அதிபரையும் பண்டாரவளை கல்விச் சமூகம் பெரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
எம். செல்வராஜா, பதுளை










