ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்படும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் பின்னர் மதிய போசனத்தில் தேசிய பத்திரிகை ஆசிரியர்கள் சிலருடன் நடந்த சிநேகபூர்வமான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டதாக ஜனாதிபதி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அல்லது நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
எவ்வாறாயினும்இ ஊடக நிறுவனத் பிரதானிகளுடன் நடந்த சந்திப்பின்போது, இதுகுறித்து உத்தியோகபூர்வத் தகவல்கள் எதனையும் ஜனாதிபதி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்கதக்து.










