இந்திய அரசின் நிதியுதவியினூடாக அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் 26 வீடுகள் இன்றைய தினம் (4.10.2021) வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்தியப் பிரிவில் பயனாளிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஹல்துமுல்ல பிரதேச சபையின் தவிசாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளருமான எஸ்.அசோக்குமார் கலந்து கொண்டார்.

அத்துடன், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.கா .உபதலைவருமான சிவலிங்கம், தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விதானகே, பெருந்தோட்ட மனிதவள தாபனத்தின் பதுளை பிராந்திய பணிப்பாளர் வெண்மதிராஜா வேவெஸ்ஸ தோட்ட முகாமையாளர்,


இ.தொ.கா பதுளை பிராந்திய முக்கியஸ்தர்கள், அரச அதிகாரிகள், மற்றும் பயனாளர் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கொழும்பில் இடம்பெற்ற இந்திய அரசின் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்விற்கு சமாந்திரமாக இந்நிகழ்வும் இடம்பெற்றது, அத்தோடு வேவெஸ்ஸ தோட்ட தெபெத்த பிரிவில் அமைக்கப்பட்ட 24 வீடுகளும் இன்றைய தினம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
