பதுளையில் காட்டுக்கு தீ வைக்க முற்பட்டவர் கைது – 14 நாட்கள் மறியல்

பதுளை, பல்லேகட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவில கீழ்பிரிவில் காட்டுக்கு தீ வைக்க முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவில தோட்டம், தெமோதரயைச சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவில கீழ்பிரிவு, காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் மறைந்திருந்தவேளையிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார்.
(ராமு தனராஜ்)

கைது செய்யப்பட்ட நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித செயற்பாடுகள் காரணமாகவே பல பகுதியில் தீ பிடித்து எரிந்துவருகின்றன. இவ்வாறான நாசகார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles