பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கலந்துரையாடலில் ஊவா மாகாண ஆளுனர் முஸாம்மில், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் தெனிபிட்டிய, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பதுளை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
பதுளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்படும் 10ஆயிரம் ரூபா அரச நிவாரண பொதியில் கிராமங்கள் போல் அல்லாது பெருந்தோட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென இதன்போது செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்ததுடன், இந்த கோரிக்கையின் பிரகாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு விசேட உணவு பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளன.