‘பதுளையில் தேங்காய் எடுக்க சென்றவர் நீரில் மூழ்கினார்’

பதுளை ஓய ஆற்றில் நபரொருவர் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

பதுளையில் நேற்று கடும் மழை பெய்தது. ஆறுகளில் வெள்ள நீரும் பெருக்கெடுத்தது.

இந்நிலையில், பதுளை பாலாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தேங்காயை எடுப்பதற்காக நீரில் இறங்கிய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரை தேடும் பணி தொடர்கின்றது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles