பதுளையில் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ரூபா 1000 வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையகமெங்கும் மேற்கொள்ளப்படும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் பதுளை மாவட்டத்தில் பெரு வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படும் இவ்வேலை நிறுத்தத்திற்கு மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், விவசாயத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து மலையக தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கி வருகின்றன.

பசறை, எல்டெப்,மீதும்பிட்டிய, கோணக்கலை பகுதிகளில் தொழிலாளர்கள் வீடுகளில் இருந்து கொண்டு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் தோட்டங்களுக்கு விஜயம் செய்து தொழிலாளர்களை சந்தித்து வருகின்றார்.

Related Articles

Latest Articles