மலையக நாட்காட்டி அறிமுக விழாவும் ஈழத்து மூத்த எழுத்தாளர் அமரர் தெளிவத்தை ஜோசப், கல்வியியலாளர் மற்றும் இலக்கிய ஆளுமை அமரர் லெனின் மதிவானம் ஆகியோருக்கான நினைவேந்தல் உரைகளும் பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் ,கல்லூரியின் அதிபரும்,கலை இலக்கிய வட்டத்தின் உபதலைவருமான கே.திருலோகசங்கர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் தலைமையுரையை அதிபர் கே திருலோகசங்கர் ஆற்றவுள்ளதோடு, அமரர் தெளிவத்தை ஜோசப் தொடர்பான நினைவேந்தல் உரையை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் வை. தேவராஜாவும், அமரர். லெனின் மதிவானம் தொடர்பான நினைவேந்தல் உரையை ஆசிரிய ஆலோசகர் மனோகரனும் ஆற்றவுள்ளனர்.மலையக நாட்காட்டி தொடர்பான விளக்கவுரையை நாட்காட்டி வடிவமைப்பாளர் ஏ. சீ.ஆர். ஜோன் நிகழ்த்தவுள்ளார். நிகழ்வின் கருத்துரைகளை ஊவ சக்தி அமைப்பின் தலைவர் சுரேஷ் நடேசன், நிவ்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் இராஜமாணிக்கம் ஆகியோர் ஆற்றவுள்ளனர். நன்றியுரையை கலை இலக்கிய வட்ட செயலாளர் ஆ.புவியரசன் ஆற்றவுள்ளதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.










