கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்ச லம் அரவிந்தகுமாரின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்தில் மூன்று தமிழ் பாடசாலைகளுக்கு மடி கணனிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 15ஆம் இராஜாங்க அமைச்சரின் கல்வி காரியாலயத்தில் நடைபெற்றது..
இதன்படி பொரகஸ் ப/ஸ்ரீகணபதி இந்து வித்தியாலய அதிபர் திரு. கே. வேலாயுதம், உடப்புஸல்லாவ ப/கம்பஹா தமிழ் மகா, வித்தியாலய. அதிபர் திரு. எம். புவனகுமார், அப்புத்தளை ப/கிளனநூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு. எஸ். ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பாடசாலைகளின் அதிபர்களிடம் தலா 20 மடி கணனிகள் வீதம் 60 மடிகணனிகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,
கணனித் துறைசார்ந்த கற்கைகள், தகவல் தொழில்நுட்ப விருத்தி என்பன மலையக குறிப்பாக பெருந்தோட்டப் பிரதேச பாடசாலைகளுக்க எட்டாக்கனிகளாகவே இருந்துவருகின்றன.
இந்த குறைபாடு மிக விரைவாக நிவர்த்திக்கப்பட வேண்டும். தகவல்
தொழில்நுட்ப அறிவுத் திறனைப் பெற்றுக்கொள்வதற்கு எமது பிள்ளைகளை தயார்படுத்தல் அவசியம். ஆகவேதான் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு மடிகணனிகள் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை அனைத்து பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு முயற்சித்து வருகிறேன். தற்போது மிகவும் வசதி குறைந்த பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவதோடு எதிர்வரும் காலங்களில் இத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
