பதுளை, தெய்வனெவெல பகுதியில் ரயில் முன் பாய்ந்து 50 வயது மதிக்க தக்க நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில், பாய்ந்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த நபர் யாரென இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா
