பதுளை நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் வேட்டையின்போது ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பதுளை நகரில், ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பதுளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராமு தனராஜ்
