பதுளை பொலிஸ் நிலையத்தில், ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பதுளை மாநகர பொது சுகாதாரப் பரிசோதகர் டி.டபிள்யு. பியல்பத்ம தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றின் அறிகுறிகள், மேற்படி அறுவருக்கு தென்பட்டதினால், அவர்களுக்கு ‘ரிபட் என்டிஜன்’ பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து,
அவர்களுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியிருப்பமை தெரியவந்துள்ளதாகவும் பொதுசுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
பொலிசாருக்கான பதவி உயர்வு தொடர்பாக, அவர்களுக்கு விசேட பயிற்சிப்பாட நெறிகள் தற்போது பதுளைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்பாடநெறிகளை மேற்கொண்டிருக்கும் ஆறு பொலிசாருக்கு தடிமன் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தமையினால், சந்தேகத்தின் பேரில், அவர்களுக்கு ‘ரிபட்என்டிஜன்’ இன்று மேற்கொள்ளப்பட்டன.
அதன் அறிக்கைக்கமைய கோவிட் 19தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இத்தகவலை, பதுளைப் பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அதிபர் வசந்தக கந்தவத்தை உறுதிப்படுத்தினார்.
பதுளை மாவட்டத்தின் பதுளை, மடுல்சீமை, மகியங்கனை, ரிதிமாலியத்தை மற்றும் கிராந்துரு கோட்டை ஆகிய பொலிஸ் நிலையங்களின் தெரிவுசெய்யப்பட்ட பொலிசார், மேற்படி பதவி உயர்வுக்கான பாடநெறிகளை தற்போதுப துளைபொலிஸ் நிலையபயிற்சிக்கூடத்தில்முன்னெடுத்துவருகின்றனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஆறு பொலிசார், பிந்துனுவௌகோவிட்19 தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனரென்றும், பயிற்சி பாடநெறிகளை மேற்கொண்டிருக்கும் ஏனைய பொலிசாருக்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் என்டிஜன்மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பதுளை மாநகர பொதுசுகாதாரப்பரிசோதகர்டி.டபள்யு. பியல்பத்ம மேலும் தெரிவித்தார்.
எம். செல்வராஜ, பதுளை
