பதுளையில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்வி கற்று வந்த ஆறு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர்கள் பிந்துனுவௌ கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு, (இன்று) 05-05-2021ல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பதுளை பொது சுகாதாரப் பரிசோதகர் பியல்பத்ம தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட ஆறு மாணவர்களில் ஒரு மாணவனின் பெற்றோருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதினால், அவர்கள் பிந்துனுவௌ கோவிட் – 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அவ் வீட்டாருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன் அறிக்கைக்கமைய அம் மாணவனுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன் அம்மாணவன் தொடர்பை ஏற்படுத்தியிருந்த ஏனைய மாணவர்கள் ஐவருக்கும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அம் மாணவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்கள் அறுவரும் ஒன்றாக இருந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களென்றும் தெரியவந்துள்ளது.
தொற்றுக்குள்ளான மாணவர்கள் அறுவரும் பிந்துனுவௌ கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
