பதுளை, கொழும்பு பிரதான வீதி உடுவர ஹத்த கன்வன்வ பிரதேசத்தில் நேற்று இரவு பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்த வீதியினூடான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பதுளையில் இருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையில் இருந்து உடுவர வரையிலும் பஸ் சேவை இடம்பெறுகின்றது. அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










