பதுளை ,சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2024ஆம் கல்வியாண்டிற்காக க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்காக 2021ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதி பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களை திசைமுகப்படுத்துதல், பாடரீதியாக உயர்தர வகுப்புகளில் இணைத்துக் கொள்ளல் போன்றவற்றிற்கான ஆரம்பக் கட்ட செயற்பாடுகளை கல்லூரியின் உயர் தரப் பிரிவும்,பழைய மாணவர் சங்கமும் இணைந்து மேற்கொண்டு வருவதாக கல்லூரியின் அதிபர் கே.திருலோகசங்கர் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; உயர் தரத்தில் இணைந்த கணிதம், உயிரியல் , பொறியியல் தொழில்நுட்பம், விஞ்ஞான தொழில்நுட்பம், உயிர்முறைமைத் தொழில்நுட்பம்,கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளுக்கான வகுப்புகளில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.இப்பிரிவுகளில் இணைந்து கல்விக் கற்க விரும்பும் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அதிபர், ப/ சரஸ்வதி தேசிய கல்லூரி, பதுளை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை உயர்தரப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி அதிபர் எஸ்.சச்சிதானந்தனின் 0712514370 என்ற இலக்கத்துடன் அல்லது பழைய மாணவர் சங்க உறுப்பினரும் ஆசிரியருமான பவனிதரனின் 0777702882 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று இம்மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகவுள்ள செயலமர்வுகள், முன்னாயத்த வகுப்புகளில் பங்குப்பற்றி பயன்பெறுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
