‘பன்டோரா ஆவணம்’ – இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்

பிரபல செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

திருக்குமார் நடேசனின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட ஆவணங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வௌியாகிய விடயங்கள் தொடர்பில், சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலமொன்றை பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles