பன்டோரா ஆவணம் குறித்து மற்றுமொரு விசாரணையும் ஆரம்பம்

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பன்டோரா’ ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பன்டோரா ஆவணம் தொடர்பில் தற்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. ஆவனத்தில் பெயரிடப்பட்டுள்ள தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவியான நிருபமா ராஜபக்சவிடமும் விசாரணை இடம்பெறவுள்ளது.

விசாரணைகளை நடத்தி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியால ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles